Posts

Showing posts from July, 2023

இரவுகளின் நட்சத்திரத்தில் உறைபவர்கள் - கருப்பண்ணா

Image
இரவுகளின் நட்சத்திரத்தில் உறைபவர்கள் - கருப்பண்ணா         நாவலின் ஆரம்ப வரிகளைப் போல, சூரியன் மேகங்களுக்கு இடையை மறைந்தும் ஒளிர்வதுமான நாட்பொழுதில் "நட்சத்திர வாசிகள்"நாவலை வாசிக்க தொடங்கினேன்.       உலகில் கடந்த பத்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்த துறையான தகவல் தொழில்நுட்ப துறையின்(Information technology) ஒரு நிறுவனத்தை பற்றியும், அதில் உறைந்து வாழும் மனிதர்களைப்   பற்றிய சித்திரம் தான் நட்சத்திர வாசிகள்.       இந்நாவலில் உலாவி வரும் மனிதர்களின் மேல் எதோ ஒரு வகையில் அழுத்தம் என்பது படர்ந்திருப்பது தெரிகிறது.       நாவலின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் ராமசுப்பு,அன்றாடம் நான் எனது அலுவலகத்தில் சந்தித்த ஒரு மனிதரையும் அவரது தினசரி நடவடிக்கைகளையும் நினைவு படுத்தி செல்கிறார். அனைத்து தனியார் நிறுவனங்களின் ஒப்பந்த கடைநிலை ஊழியர்களின் அன்றாடம் என்பது எந்த ஒரு மாற்றமும் இன்றி நிகழ்வதை உணரமுடிகிறது.        தகவல் தொழில்நுட்ப துறையின் பணிபுரியும் கணவன் மனைவிக்கும் இடையே ஆன மனக் கசப்புகளையும், கிராமத்தில் வளர்ந்த மிதிலனுக்கும் பெருநகரங்களில் வசித்த மீராவுக்கும் ஆன மன ஓட்ட்டங்களின் இடைவெளிய