வெறுமையின் ஒருநாள்-அரவிந்த்

      வெறுமையின் ஒருநாள் - அரவிந்த்.


அர்த்தமற்ற காலைப்பொழுது  தனது

 சுயத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க
 
 ஏதென்ஸ் தோட்டத்தின் பாம்பின்

 மனதில் கசக்கிறது அந்த பழம்.


கரையான்களால் எழுதப்பட்ட அர்த்தங்களில்

வாழ்வைத் தேடி களைக்கப்பட்ட

எழுத்துக்களால் வழக்கொழிந்த மொழியின்‌

நடுவே மறைகிறது அந்த பழம்.


தன்னை அர்த்தப்படுத்திக் கொள்ளாத

மனம் மண்ணில் மரணிக்கிறது

எனக் கூவிக் கொண்டு

தன் புற்றை அடைகிறது  பாம்பு.


பல இரவுகளின்‌ மரணங்களுக்கு 

இடையே மீண்டும்  பழுக்கிறது

மறைந்த அந்தப் பழம்.






























Comments

Popular posts from this blog

இரவுகளின் நட்சத்திரத்தில் உறைபவர்கள் - கருப்பண்ணா